Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு- அதிமுக துணை நிற்க வேண்டும்…. முதல்வர் ஸ்டாலின்…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் செய்து வருகிறார். அதிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் நலனைக் கருதி சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அதன்படி நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின், நீட் தேர்வு குறித்து பாதிப்புகளை அறிய புதிய குழுவொன்றை நியமித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில், நீட் தேர்வு நடைபெறுமா நடைபெறாதா என எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் விலக்கு பெருவோம் என்றோம், அதில் உறுதியாகவும் உள்ளோம், அதற்கு அதிமுகவும் துணை நிற்க வேண்டும். ஏ.கே.ராஜன் குழு அளிக்கும் அறிக்கையை வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |