நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், முதல்வர் முக.ஸ்டாலின் பேசியதாவது, நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் அரசியல் சாசன கடமையை ஆளுநர் செய்யவில்லை. ஆளுநர் தனது கடமையை செய்யாததால் மீண்டும் அவரிடம் வலியுறுத்தினோம் என்று முதல்வர் முக.ஸ்டாலின் பேசியுள்ளார்.