சென்னை, தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் அடிப்படையில் சட்டப்பேரவைசிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில் சபாநாயகர் அப்பாவும் பேசியதாவது, அவசியத்தை உணர்ந்து சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நீட் விலக்கு கோரும் மசோதாவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைக்க இருக்கிறார் என்று கூறினார். அதனை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பிய கடிதத்தை பேரவையில் சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.
Categories