Categories
மாநில செய்திகள்

“நீட் விலக்கு தீர்மானம்”… அனைத்துக்கட்சி கூட்டம் தொடக்கம்…. லீக்கான தகவல்….!!!!!

நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. நீட் தேர்வு விலக்கு கோரிய சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் தமிழக அரசு சார்பாக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டி, மீண்டும் நீட் விலக்கு தீர்மானம் நிறைவேற்றுவது குறித்து முடிவெடுக்க வாய்ப்பு என்று தகவல் வெளியாகியுள்ளது..

Categories

Tech |