Categories
மாநில செய்திகள்

“நீட் விலக்கு”…. நாங்கள் துணையாக நிற்போம்…. ஜி.கே.மணி பேச்சு….!!!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கடந்த பல வருடங்களாக பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியமைத்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் நீட் தேர்வு விலக்கு குறித்து ஜனவரி 8ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும்.

இந்தக் கூட்டத்தில் அனைத்து கட்சியினரும் கலந்துக்கொள்ள வேண்டுமென்று முதல்வர் முக.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இதற்கு ஆதரவு தெரிவித்து பேசிய ஜி.கே.மணி நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு பாமக துணையாக நிற்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |