நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வழங்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் நீட்தேர்வு மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் காலதாமதம் செய்து வந்த நிலையில், நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டி தமிழக அரசின் சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்என்ரவி திருப்பி அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் வரும் 8ஆம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடைபெறும். நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்கு மீண்டும் அனுப்ப அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் செய்யப்பட்டுள்ளது.