Categories
மாநில செய்திகள்

நீட் விலக்கு மசோதா…. “இந்த முறை அவர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்ல”…. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி….!!!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா மீண்டும் சட்டசபையின் சிறப்பு கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் ஆளுநருக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “இந்த முறை ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பாமல் ஜனாதிபதிக்கு நிச்சயம் அனுப்பி வைப்பார். தமிழ்நாட்டு மக்களுடைய உணர்வுகளை புரிந்து நடந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

அதேபோல் ஆளுநர் மசோதாவை அனுப்பிய பிறகு தமிழக குழு ஜனாதிபதியை சந்திக்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார். ஜனாதிபதியும் தமிழக மக்களுடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு விரைவில் நல்ல முடிவாக எடுப்பார். அப்படி ஜனாதிபதி நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றால் மேற்கொண்டு சட்டரீதியான வாய்ப்புகள் முன்னெடுக்கப்படும். பாஜக நீட் தேர்வுக்கு போட்ட முடிச்சை அவர்களே அவிழ்ப்பார்கள்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |