Categories
அரசியல்

நீட் விவகாரம்…. அவங்களே கன்ஃபியூஸன்ல இருக்காங்க!…. அதிமுகவை சாடிய துரைமுருகன்….!!!!

திமுக கழக பொதுச்செயலாளர் துரைமுருகன் சைதாப்பேட்டை அன்னை வேளாங்கண்ணி கல்லூரி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுத்தோம். ஆனால் அதில் தவறு இருப்பதாக ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்.

மாநில அரசிடமிருந்து வரும் கோரிக்கையை நிறைவேற்றுவது தான் ஆளுநரின் வேலை” என்று கூறினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் ‘அதிமுக நீட் விவகாரத்தில் மொட்டை தலையன் குட்டையில் விழுந்தது போல் செயல்படுகிறது. நீட்டை எதிர்க்கிறார்களா? அல்லது நீட்டை ஆதரிக்கிறார்களா ? என்பது அவர்களுக்கே தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Categories

Tech |