நீட் பிரச்சினையில் இப்பபோதைக்கு தீர்வு கிடைக்காது என்பதையே முதலமைச்சரின் அறிவிப்பு சூசகமாக காட்டுவதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக பின்பற்றிய வழியை பின்பற்றி உள்ளதாக விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நீட் தேர்வு குறித்து திமுக அமைப்பு குழுவுக்கு எந்த சட்ட அங்கீகாரமும் இல்லை எனவும், இது அரைத்த மாவை அரைப்பதற்கு சமம்.
சட்ட முன்வடிவை திமுக நிறைவேற்றி உள்ளதாக குறிப்பிட்ட அவர், கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்து கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டுவராத திமுக மீண்டும் கல்வியை மாநில பட்டியலில் கொண்டு வருவோம் என கூறுவது தும்பை விட்டு வாலைப் பிடித்ததற்கு சமம். திமுகவிடம் 38 எம்பிக்கள் இருப்பதால் அடுத்த ஆண்டு நடைபெறும் குடியரசு தலைவர் தேர்தலில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து நீட் தேர்வை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.