ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் பலன்கள்:
ஆயில் புல்லிங் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால் உடனே வேறு நிறுவனத்தின் எண்ணெய்க்கு மாறிவிடலாம். அதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட தேவையில்லை. வயிற்றுப்போக்கு அல்லது வாந்தியை தவிர வேறொன்றும் நேராது.
விரைவில் நிவாரணம் வேண்டுவோர் நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால் வெற்று வயிற்றுடன் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி. இதன் மூலம் மூட்டு வலி, முழங்கால் வலி, பல் மற்றும் வாய் சம்பந்தமான நோய்கள், கண், காது, மூக்கு சம்பந்தமான நோய்கள், வயிறு, குடல் நோய்கள், மலச்சிக்கல் மூலம் தும்மல், சளி, களைப்பு, தூக்கமின்மை, ஆஸ்துமா, வாய்வுத்தொல்லை, ஒவ்வாமை, அலர்ஜி போன்ற நோய்கள் குறைந்து விடுகிறது என்கின்றனர்.
ஆயில் புல்லிங் மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும் சிலருக்கு நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறையும். அது நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி.
வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான இருக்க, தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் பற்களில் தேங்கி இருக்கும் கரைகள் நீங்கி பற்கள் வெள்ளையாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும்.
தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால் வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும். ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்பட்டால் ஆயில் புல்லிங் செய்தால் இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு ஈறுகள் ஆரோக்கியமாகவும், பல் கூச்சம் நிறுத்தப்பட்டு வலி மறைந்து விடும்.