Categories
சினிமா

நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கபோகும் தல-தளபதி…. குஷியில் ரசிகர்கள்….!!!!

பிரபல நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் சென்ற 6 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்களது திருமணம் வரும் ஜூன் 9 ஆம் தேதி திருப்பதி கோவிலில் வைத்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பதியில் அதிகளவு விருந்தினர்கள் அனுமதியில்லை என்பதால் இவர்களின் திருமணம் சென்னையிலுள்ள மகாபலிபுரத்தில் பிரபல ரிசார்டில் மாற்றி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள திருமணத்தில் பிரபலங்கள்20 பேர் மட்டுமே அனுமதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இருபது பேரில் ரஜினி, கமல், அஜித், விஜய், விஜய்சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் நீண்ட இடைவெளிக்கு பின் அஜித், விஜய் இருவரும் நயன்தாரா திருமணத்தின் வாயிலாக சந்திக்க உள்ளதால் தல -தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Categories

Tech |