Categories
உலக செய்திகள்

நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்கள் பகுதியை கைப்பற்றிய உக்ரைன் படை…. மகிழ்ச்சியில் அதிபர் ஜெலென்ஸ்கி ….!!!!!

ரஷிய படைகள் கைப்பற்றிய உக்ரைன்  பகுதிகளை உக்ரைன்  ராணுவ படை மீட்டுள்ளது.

உக்கரை நாட்டின் மீது ரஷியா கடந்த 7 மாதங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் உக்ரைன்  நாட்டின் பெரும்பாலான பகுதிகளை  ரஷிய படைகள் கைப்பற்றினர். இதற்கிடையே போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைன்  பகுதிகளை ரஷ்யாவுடன் இணைக்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷிய அதிபர் புதின்  அறிவித்தார். இந் நிலையில் ரஷிய படையினரிடமிருந்து உக்ரைனின்  முக்கிய நகரங்களை உக்ரைன்  ராணுவம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில்  டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள லைமன் நகரை தளவாட மற்றும் போக்குவரத்து மையமாக ரஷியா பயன்படுத்தி வந்தது. இதனையடுத்து ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட 4  பிராந்தியங்களில் டெனஸ்டேக்கும் ஒன்றாகும். அந்த நகரை மீட்க உக்ரைன்  படையினர் தொடர்ந்து சண்டையிட்டனர். மேலும் அங்குள்ள லைமனை உக்ரைன் படை மீட்டுள்ளது. இது  ரஷ்யாவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இது குறித்து உக்ரைன்  அதிபர் ஜெலேன்ஸ்கி  கூறியதாவது. லைமன் பகுதி ரஷிய துருப்புகளிடமிருந்து முற்றிலுமாக விடுவிக்கப்பட்டது. எங்கள் ராணுவத்திற்கு மிக்க நன்றி என கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

Categories

Tech |