Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நீண்ட நாட்களுக்கு பிறகு… கோடை வெயிலை தணிக்க வந்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் நேற்று லேசான மழை பெய்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, கே.புதுப்பட்டி, குன்னத்தூர் ஆகிய பகுதிகளில் நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று சூறை காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இந்த மழை பெய்துள்ளது. அதேபோல் நேற்று பகல் 2 மணி அளவில் சிங்கம்புணரி பகுதியில் பரவலாக மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |