Categories
உலக செய்திகள்

நீண்ட நாளாக தேடப்பட்ட குற்றவாளி.. முகக்கவசமின்றி வந்து சிக்கிய சுவாரஸ்ய சம்பவம்..!!

பிரான்சில் 3 மாதங்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி தற்போது முகக்கவசம் அணியாததால் காவல்துறையினரிடம் பிடிபட்டுள்ளார். 

பிரான்சில் உள்ள Brive-la-Gailarde என்ற நகரில் காவல்துறையினர் சோதனை பணியை  மேற்கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் ஒரு நபர் முகக்கவசம் அணியாமல் வந்துள்ளார். இதனால் அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த குற்றவாளி என்று தெரியவந்துள்ளது.

மேலும் அவருக்கு சிறை தண்டனை காலம் மேலும் மூன்று மாதங்கள் மீதம் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. அதாவது அந்த நபர் பிணையில் வெளியில் வந்துள்ளார். மறுபடியும் டிசம்பர் மாதத்தில் சிறைக்கு செல்ல வேண்டும். ஆனால் மூன்று மாதங்களாக மறைந்து வாழ்ந்து வந்துள்ளார். இதனால் 3 மாதங்களாக அவரை தேடி வந்த காவல்துறையினர் உடனடியாக கைது செய்துள்ளனர்.

Categories

Tech |