மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் வடிவேலு நடுக்க உள்ளதாக இணையதளங்களில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மாரி செல்வராஜ். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அடுத்ததாக மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் ‘மாமன்னன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு எ ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
https://twitter.com/mari_selvaraj/status/1499717614091718658?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1499717614091718658%7Ctwgr%5Ehb_1_8%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.dailythanthi.com%2FCinema%2FCinemaNews%2F2022%2F03%2F05005319%2FVadivelu-in-Mamannan–Mari-Selvaraj-happy-tweet.vpf
இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில்’ மாமன்னர்’ திரைப்படத்தில் வைகைப்புயல் வடிவேலு நடிக்க உள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் ‘ஒரு தொடர் கனவு நிறைவடைந்தது மாமன்னனின் வைகைப்புயல்’ என்று தெரிவித்துள்ளார்.