Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாகியும் திறக்கப்படாத கதவு…. அதிர்ச்சியில் உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள களியக்காவிளை அருகில் குளப்புரம் வன்னியக்கோடு பகுதியில் பிரமிக்‌ டேனியல் (43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய தாய்-தந்தை இறந்து விட்டனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று பிரமிக் டேனியலின் வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்காமல் இருந்தது. இதனால் உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர். அப்போது பிரமிக் டேனியல் விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பிரமிக் டேனியலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரமிக் டேனியல் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அதன்பிறகு பிரமிக் டேனியலின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து களியக்காவிளை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |