தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு தற்போது விஜய் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வம்சி இயக்க, ராஷ்மிகா மந்தனா, குஷ்பூ, சாம், யோகி பாபு, சரத்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னை போன்ற இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சென்னை எண்ணூரில் நடைபெற்ற ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் விஜய் வந்திருந்தார்.
அப்போது ரசிகர்கள் பலரும் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக குவிந்துள்ளனர். ஆனால் ரசிகர்களை போலீசார் தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியுள்ளனர். இதனால் கோபமடைந்த ரசிகர்கள், நாங்கள் எங்கள் தளபதிக்காக தான் இதையெல்லாம் செய்கிறோம். எங்களுக்கு தளபதி தேவையே கிடையாது. எங்களுக்கு விஜய்யை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இந்த வாசல் முன்பு வந்து நின்று கையசைத்தால் கூட போதும். நடிகர்கள் ரஜினி மற்றும் சூர்யா வந்த போது கூட எங்களை பார்ப்பதற்கு அனுமதித்தார்கள். ஆனால் விஜய் வரும்போது மட்டும் அனுமதிப்பதில்லை.
அதற்கு பதிலாக தடியடி நடத்தி எங்களை விரட்டுகிறார்கள் என்று ஆதங்கத்துடன் கூறினர். இந்நிலையில் வாரிசு படத்தின் சூட்டிங்காக நேற்று இரவு சென்னையில் உள்ள எண்ணூருக்கு விஜய் வந்திருந்தார். அப்போது ரசிகர்கள் விஜய்யை பார்ப்பதற்காக வெகு நேரமாக வெளியில் காத்திருந்தார்கள். இதனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது பாதியில் வெளியே வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#ThalapathyVijay greets fans at #Varisu Shooting Spot Chennai. @actorvijay! pic.twitter.com/SbUkoRGfGq
— #GOAT Movie (@GOATMovOff) September 27, 2022