Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்த மனைவி….. ஆத்திரத்தில் கணவனின் வெறிச்செயல்….. போலீஸ் விசாரணை….!!!!

மனைவியை கணவன் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையம் கிராமத்தில் விஜயராஜ்-மேனகா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்ததுள்ளது. இதில் விஜயராஜ் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மேனகா நீண்ட நேரமாக செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த விஜயராஜ் செல்போனை கீழே வைக்குமாறு மேனகாவை சத்தம் போட்டுள்ளார். ஆனால் மேனகா கேட்காமல் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயராஜ் பிளாஸ்டிக் பைப்பால் மேனகாவை பலமாக தாக்கியுள்ளார். இதில் மேனகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருக்கோவிலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மேனகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஜயராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |