கன்டெய்னர் லாரியில் உள்ள பைகளை சோதனை செய்யுமாறு திமுகவினர் ,அதிகாரிகளிடம் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது .
தஞ்சை மாவட்டத்தில் ,நேற்று காலை பழைய ஆட்சியர் அலுவலகத்தின் முன் கன்டெய்னர் லாரியானது நின்றுகொண்டிருந்தது. நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ,பறக்கும் படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு பறக்கும் படை அதிகாரிகள் வந்து விசாரித்தபோது, இந்த லாரியானது ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தது என்றும், ஹரியான மாநிலத்தில் இருந்து வந்துள்ளதாகவும், தெரிந்தது .
லாரியை சோதனையிட்ட அதிகாரிகள், கன்டெய்னரில் தமிழக அரசு பள்ளிகளுக்கு வழங்கும் இலவச புத்தக பைகள் இருந்தன. ஆவணங்கள் சரியாக இருந்ததால் லாரிக்கு அனுமதி அளித்துள்ளனர். ஆனால் சம்பவ இடத்திற்கு வந்த திமுகவை சேர்ந்தவர்கள் பைகளை சோதனை செய்த பின்பே ,அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறினர் . இதனால் கண்டெய்னர் லாரியில் இருந்த புத்தகப் பைகளை திமுகவினரின் முன் சோதனை செய்தனர் . பின் அங்கிருந்த ஒரு அறையில் புத்தகப் பைகள் அடுக்கி வைக்கப்பட்டது. இதன்பின் அந்த அறைக்கு சீல் வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.