நீண்ட பயணத்திற்கு ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிய வேண்டாம் என்று கூறப்படுகின்றது.
நீண்ட தூரப் பயணங்களின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருக்கும் நபர்கள் இது போன்ற பயணங்களை மேற்கொள்ளும் போது நாம் சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக என்ன மாதிரியான உடைகள் அணிவதை என்பதை கட்டாயம் அறிந்து கொள்வது அவசியம். இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது கால்கள் அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும்.
இதன் காரணமாக கால் நரம்புகளில் ரத்தம் உறையும் வாய்ப்புகள் உள்ளது. இந்த ரத்தக்கட்டு நுரையீரலுக்குச் சென்று இதயத்திற்கு செல்லும் ரத்தத்தை அடைக்கும் பட்சத்தில் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடியும். எனவே நீண்ட பயணங்களை மேற்கொள்ள விரும்புபவர்கள் இறுக்கமான ஆடைகள், ஜீன்ஸ் பேண்ட்கள் போன்றவற்றை அணிவதை தவிர்ப்பது மிகவும் நல்லது.