நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் வெற்றிகரமாக 300 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 பிப்ரவரி மாதம் முதல் ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம் . இந்த சீரியல் துலா பஹ்ட் ரே என்கிற மராத்தி சீரியலின் ரீமேக் ஆகும். இதில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாகவும் தர்ஷனா அசோகன் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். மேலும் கார்த்திக் சசிதரன், சைராம், சத்யபிரியா, நிவாஷினி திவ்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்த சீரியலில் கதாநாயகன் கதாநாயகியை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று தனது காதலை தெரிவித்த காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்த சீரியல் வெற்றிகரமாக 300 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளது. மேலும் நடிகர் ஜெய் ஆகாஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தங்களது சீரியலுக்கு ஆதரவு தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து இந்த சீரியல் நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.