Categories
சினிமா

“நீதான் என் பலம்”…. தந்தை மறைவுக்கு பின் நடிகர் மகேஷ் பாபுவின் உணர்ச்சிகரமான ட்விட்…. வைரல்…..!!!!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் மகேஷ்பாபு. இவரின் தாயார் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அண்மையில் இவரின் தந்தை கிருஷ்ணா உயிரிழந்தார். தொடர்ந்து தாய் தந்தையின் இழப்பு குடும்பத்தை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மகேஷ் பாபு தனது தந்தை கிருஷ்ணாவின் மறைவுக்குப் பிறகு முதன்முறையாக தனது உணர்ச்சிகளை ட்விட்டரில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அதில், அப்பா பயமில்லாமல் பிழைத்தாய், உங்கள் இயல்பில் தைரியமான மற்றும் துணிச்சலான நீங்கள் என் உத்வேகம், என் பலம்,ஆனால் எனக்கு முக்கியமான அனைத்தும் ஒரு நொடியில் தொலைந்து போனது. ஆனால் நான் முன்பை விட வலுவாக உணர்கிறேன். இப்போது நான் பயப்படவில்லை, உங்கள் ஒளி எப்போதும் என்னில் பிரகாசிக்கும், உங்கள் பாரம்பரியத்தை நான் தொடர்வேன், நான் உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன், லவ் யூ அப்பா, நீங்கள்தான் என் சூப்பர் ஸ்டார் என மகேஷ்பாபு மிக உணர்ச்சிகரமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |