Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நீதான் நகையை எடுத்தாயா….? நர்சை துன்புறுத்திய உரிமையாளர்…. போலீஸ் விசாரணை…!!

நகையை திருடியதாக மருத்துவ மைய உரிமையாளர் நர்சை துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவ மையத்தில் ஜோதிகா என்ற பெண் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜோதிகா தனது உரிமையாளர் கொடுக்கும் முகவரிக்கு சென்று அந்த வீட்டில் இருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரை மற்றும் மருந்துகளை கொடுத்து அவர்களை பராமரித்து வருவார். கடந்த மாதம் தாம்பரத்தில் இருக்கும் ஒருவரின் வீட்டிற்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜோதிகா சென்றுள்ளார்.

அப்போது ஜோதிகா தங்க நகைகளை திருடி விட்டதாக வீட்டின் உரிமையாளர் மருத்துவ மைய உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டதும் மருத்துவ மைய உரிமையாளர் நகையை எடுத்தாயா எனக்கூறி ஜோதிகாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலில் சொந்த ஊருக்கு சென்ற ஜோதிகா திடீரென மயங்கி கீழே விழுந்து விட்டார். இதனையடுத்து ஜோதிகாவை அவரது பெற்றோர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |