பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளுக்கு சாதகமாக தீர்ப்பு அளித்த மும்பை பெண் நீதிபதிக்கு 150 ஆணுறைகள் அனுப்பப்பட்டு பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பாலியல் வன்கொடுமை தலைவிரித்தாடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடூரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் சிறுமியின் ஆடைகளை கலையாமல் மார்பகத்தை தொட்டால் பாலியல் அத்துமீறல் கிடையாது என சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா கனேதிவாலா தீர்ப்பளித்து இருந்தார். அதனால் பெண் நீதிபதிக்கு 150 ஆணுறைகளை அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அனுப்பி வைத்து நீதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீதிபதியின் சர்ச்சைக்குரிய தீர்ப்பு தவறு செய்யும் ஆண்களுக்கு சாதகமாக உள்ளது. ஆணுறையை அணிந்தால் கூட தோளோடு தோள் தொடர்பு இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.