Categories
தேசிய செய்திகள்

நீதிபதியின் நிபந்தனையால் சர்ச்சை-கொடுமை… மிகக் கொடுமை…!!!

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நிபந்தனை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக பாலியல் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது. அதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அனைவரும் வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிரான பல்வேறு சட்டங்களை அரசு கொண்டு வந்தாலும், சில காம கொடுரர்கள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு தான் வருகிறார்கள்.

நாட்டின் ஏதாவது ஒரு பகுதியில் தினம்தோறும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. அதனால் நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகிவருகிறது. அதுமட்டுமன்றி பாலியல் வன்கொடுமைகளுக்கு, நீதிமன்றத்தில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பெண்கள் செல்கிறார்கள். ஆனால் அங்கு நடப்பது என்னவோ வேறு. பாலியல் வன்கொடுமைகளுக்கு சாதகமான பல்வேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருவதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மைனர் பெண்ணை 18 வயது நிறைவடைந்ததும் திருமணம் செய்வீர்கள் என்றால் உங்களுக்கு உதவுகிறோம் இல்லை என்றால் சிறை செல்ல நேரிடும் என ஜாமீன் கோரி அரசு அதிகாரியிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி நிபந்தனை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நீதிபதி பஞ்சாயத்தில் தீர்ப்பு சொல்வது போல் கூறியிருப்பது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

Categories

Tech |