Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

நீதிபதி அளித்த தீர்ப்பு …. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

நீதிமன்றம் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ செட்டிப்பட்டு கிராமத்தில் எல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டுசாமி என்ற  மகன் இருக்கிறார். இந்நிலையில் பட்டுசாமி தனது நண்பர்களான  பாலச்சந்தர், ராஜா ஆகியோருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த  பரிமலா  என்பவரிடம் தகராறு செய்துள்ளனர். இதனால் கோபமடைந்த பரிமலா  காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 3 வாலிபர்களை  திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 3 வாலிபர்களையும்   நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த பட்டுசாமி நீதிமன்றத்தின் முதல் மாடியிலிருந்து கீழே குதித்து  தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த பட்டுசாமியை  அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |