Categories
மாநில செய்திகள்

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….. நடந்தது என்ன?….. செம ஷாக்கில் தமிழக அரசு…..!!!!!

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாக அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு ரத்து செய்ய வலியுறுத்தி வேலுமணி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உயர்நீதிமன்றம் நியமித்த அதிகாரியின் ஆரம்பகட்டம் விசாரணையில் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று அளித்த அறிக்கையை மீறி அரசியல் உள் நோக்கத்துடன் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆரம்பகட்ட விசாரணையின் அறிக்கையை எதிர்த்து அரசோ, மனுதாரர்களோ வழக்கு தொடரவில்லை என்று கூறியிருந்தார். இந்த மனுவானது தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜு ஆஜராகி இருந்தார். இதற்கு தமிழக அரசு மத்திய அரசின் வருமானவரித்துறை வழக்கறிஞர் எப்படி இந்த வழக்கில் ஆஜராகலாம்? என்று ஆட்சேபம் தெரிவித்தது. மேலும் வழக்குத் தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என்றும் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க கூடாது என்று ஆட்சேபம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி மாலா அமரில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆட்சேபம் குறித்து நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் டெண்டர் முறைகள் குறித்து வழக்கை விசாரித்து செய்ய கோரி எஸ்.பி. வேலுமணி தொடர்ந்த வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வை விசாரிக்கும். மேலும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த வழக்கு மீதான இடைக்கால உத்தரவு பிறப்பிப்பதுயை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் இந்த வழக்கில் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் ஆஜராகலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை கையில் எடுத்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றமே திடீரென சேம் சைடு கோஸ் போட்டு உள்ளதாக தமிழக அரசு கடும் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |