பிரித்தானியாவிலிருந்து ரூவாண்டாவிற்கு நாடுகடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் முதல் விமானம் கடைசி நிமிடத்தில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. கடத்தல்காரர்களால் பிரான்ஸ் நாட்டிலிருந்து மிக சிறிய படகுகளில் ஆங்கில கால்வாய் வழியாக ஆபத்தான முறையில் நடத்தப்படும் புலம்பெயர்வு நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதமாக பிரித்தானிய அரசு புகலிடக் கோரிக்கையாளர்களை நாட்டிற்கு அனுப்பும் செயல் திட்டத்தை அறிவித்துள்ளது. மேலும் பிரித்தானிய அரசின் இந்த திட்டமானது மிகவும் கொடூரமானது என்றும் குற்றம் சாட்டிய சில மனித உரிமை அமைப்பு புகலிடக் கோரிக்கையாளர்கள் அமைப்பு அரசின் திட்டத்திற்கு எதிராக அவசர கால தடை மற்றும் இடைக்கால தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கானது பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம் மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றம் இரண்டிலும் தோல்வி அடைந்ததை தொடர்ந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் புகலிடக் கோரிக்கையாளர்களை அனுப்பும் முதல் விமானம் செவ்வாய்க்கிழமையன்று உள்பட தயாராக உள்ளது. இந்த நிலையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் தலையீட்டால் பிரித்தானியாவில் இருந்து ரூவாண்டாவிற்கு பறக்க இருந்த கடத்தல் விமானம் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. 130 பேர் வரை பயணிக்க பிரித்தானிய அரசு முன்னதாக திட்டமிட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை அதன் அனைத்து புகலிடக் கோரிக்கையாளர்கள் விமானத்தில் இருந்து அகற்றப்பட்டு இருக்கின்றனர்.ரூவாண்டாவிற்கு நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்களின் திட்டத்தை ரத்து செய்யும் கோரிக்கைகளை உள்நாட்டு நீதிமன்றம் ரத்து செய்ததற்கு மத்தியில், இன்று பிற்பகுதியில் ஈராக் கைதி ஒருவர் நாடு கடத்தப்படுவதை தடுத்து நிறுத்த ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.