பிரபல நாட்டின் அதிபர் கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
அமெரிக்காவில் கடுமையான கருக்கலைப்புச் சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. இதன் காரணமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு சட்டங்களை தடை செய்ய முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், பெண்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு சொந்த ஜனநாயக கட்சியினரும் அதிபர் ஜோ பைடனுக்கு கடும் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இதன் காரணமாக அதிபர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கருக்கலைப்பு சட்டத்திற்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் கருக்கலைப்பு சட்டங்கள் அமலில் உள்ள மாகாணங்களில் நாடாளுமன்றம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.