பெண்ணை செல்போனில் படம் பிடித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் குமாரவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் காரைக்குடி ஆதலாத் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு விசாரணைக்காக வந்த சித்ரா என்ற பெண்ணை நீதிமன்ற விதிமுறைகளுக்கு எதிராக சித்ராவிடம் தகராறு செய்துள்ளார்.
இதனையடுத்து குமாரவேல் தனது செல்போனில் சித்திராவை படம் பிடித்துள்ளார். இதனை பார்த்த நீதிமன்ற தலைமை எழுத்தாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குமார்வேலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.