எம் .எல்.ஏ பிரபுவின் மனைவி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக உலகில் கொரோனா பிரச்சனை நிகழ்ந்து வரும் நிலையில் ஊரடங்கு அண்மையில் நடந்த கள்ளக்குறிச்சி தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த பிரபு என்பவர். இவர் கல்லூரி மாணவியை சவுந்தர்யா என்பவரை கடந்த மாதம் ஐந்தாம் தேதி அன்று திருமணம் செய்து கொண்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இவருக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தியாக துருகத்தை சேர்ந்த அந்தப் பெண்ணின் தந்தை சாமிநாதன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார் . அதில் தனது மகள் சவுந்தர்யா திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் தன்னுடைய மகளை கள்ளக்குறிச்சி எம். எல்.ஏ. பிரபு ஆசை வார்த்தை பேசி கடத்தி விட்டதாகவும் தெரிவித்துள்ளார் . மேலும் இது குறித்து போலீசில் தகவல் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தன்னை சில பேர் மிரட்டுகிறார்கள். எனவே தன் மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கு இடையில் தன்னை யாரும் கடத்தவில்லை என்று மணப்பெண் சவுந்தர்யா நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்டுள்ளார் . மேலும் சவுந்தர்யாவை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யவில்லை என எம்.எல்.ஏ பிரபுவும் விளக்கம் அளித்துள்ளார் .எனவே சாமிநாதன் தாக்கல் செய்த மனு ஐகோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பிறகு காதல் திருமணம் செய்துகொண்ட கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ- பிரபு அவருடைய மனைவியை நாளை மதியம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர் .