Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் அண்ணாமலை நகரில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக திவ்யா ஜெயக்குமாரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த திவ்யா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |