Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

நீதிமன்ற உத்தரவின் படி…. அனுமதியின்றி வைக்கப்பட்ட சாமி சிலை அகற்றம்…. போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலம் இருக்கிறது. அந்த நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் அறநிலையத்துறை அதிகாரிகள் கோவில் நிலத்தில் இருக்கும் கடைகளை பூட்டி சீல் வைத்தனர். அதன்படி பார்வதிபுரத்தில் இருக்கும் ஒரு சங்க அலுவலகத்திற்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது சங்க அலுவலகத்திற்குள் முருகன் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலையை வழிபட அனுமதி வழங்க கோரி சிலை வைத்தவர்கள் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவினை விசாரித்த நீதிமன்றம் நிலம் தொடர்பாக ஏற்கனவே வழக்கு நடப்பதால் சிலை வைப்பதற்கு அங்கு அனுமதி இல்லை என உத்தரவிட்டனர். இதனால் அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று சங்க அலுவலகத்திற்கு சென்று சீலை அகற்றி முருகன் சிலையை எடுத்து நாகராஜா கோவிலில் இருக்கும் சிலை பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். முன்னதாக அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |