Categories
மாநில செய்திகள்

நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் மதிக்கிறார்களா?….. தமிழக அரசு சார்பில் விளக்கம்….!!!

உயர்நீதிமன்றத்தில் சமீபத்தில் நடைபெற்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் தலைமையிலான முதல் அமர்வு, நீதிமன்ற உத்தரவை அரசு அதிகாரிகள் அமல்படுத்துவது இல்லை என்றும் நீதிமன்றத்தில் தொடரப்படும் வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு அதிலும் உத்தரவு பிறப்பித்தால் அதனை அதிகாரிகள் செயல்படுத்தவில்லை என்று கருத்து தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளதற்கும் அரசு துறைகளில் செயல்பாடுகளுக்கும் அந்தந்த துறைகளில் மேற்கொள்ளும் செயலாளர்கள் பொறுப்பாவார்கள் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் விசாரணைக்கு வரும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்தனர்.

அதுமட்டுமில்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை பொறுத்தவரை இனி யாருக்கும் தயவு காட்டமாட்டோம் என்று நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முடியாவிட்டால் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தவிர்க்க நீதிமன்ற உத்தரவை குறித்த காலத்தில் அமல்படுத்த வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அனைத்து துறை செயலாளருக்கும், அதிகாரிகளுக்கு, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தமிழக அரசு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளதாக தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தலைமை நீதிபதி அமர்வில் தெரிவித்து அந்த கடித நகலையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த கடிதத்தை தலைமை நீதிபதி முனீஷ்வரநாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு பெற்றுக்கொண்டனர்.

Categories

Tech |