Categories
தேசிய செய்திகள்

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து…. “கவர்ச்சி உடையில் மாணவிகள் போராட்டம்”….. தீயாய் பரவும் Photos….!!!!

கேரள எழுத்தாளர் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டிய பெண், பாலியல் இச்சையை தூண்டும் விதமாக ஆடை அணிந்திருந்ததால் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு இந்த வழக்கு பொருந்தாது என கருத்து தெரிவித்த நீதிமன்றம் எழுத்தாளருக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டிருந்தது. மேலும் பெண்கள் தன் உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்து பாலியல் இச்சையை தூண்டும் வகையில் உரை அணிந்திருந்தால் பாலியல் சீண்டல் குற்றம் ஆகாது என்று கேரளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு அளித்திருந்தார்.

இந்த தீர்ப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் ஷார்ட்ஸ், பனியன் அணிந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தங்களது எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |