டெல்லியில் உள்ள ரோகினி நீதிமன்றத்தில் வாயில் எண் 8 அருகில் சஞ்சீவ் சவுத்ரி மற்றும் ரிசி சோப்ரா ஆகிய இரு வழக்கறிஞர்களுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த நாகலாந்து ஆயுதமேந்திய காவல்துறையின் கான்ஸ்டபிள் ஒருவர், தகராறு இடையே தலையிட்டு பிரச்சனையை துப்பாக்கிச் சூடு நடத்தி கலைக்க முயற்சி செய்துள்ளார். கான்ஸ்டபிள் துப்பாக்கியை தரையை நோக்கி சுட்ட போது கான்கிரீட் கற்கள் எகிரி பட்டதில் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Categories