பாஜக அரசாங்கத்தால் விவசாயிகளின் நீதியின் குரல்களானது ஒடுக்கப்படுகின்றன என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், உத்தர பிரதேச காங்கிரஸ் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “விவசாயிகளை அடக்குபவர்கள் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். மேலும் பாஜக அரசாங்கத்தால் விவசாயிகளுக்கான நீதியின் குரல் ஒடுக்கப்படுகின்றன. மேலும் இதனை நாங்கள் விடமாட்டோம்” என்று பதிவிட்டிருந்தார்.
இதில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, லக்கிம்பூர் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய அமைச்சர் அஜஸ் மிஸ்ராவும், அவருடைய மகனும் நடந்த இக்கோர சம்பவத்திற்கு பிறகு சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிகிறார்கள். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறுவதற்கு செல்லும் எங்களைப் போன்றவர்களை பாஜக அரசாங்கத்தினர் தடுத்து நிறுத்துகிறார்கள் என்று சூசகமாக கூறியுள்ளார்.