தந்தை – மகன் கொலை வழக்கில் மதுரை கிளை சிபிசிஐடி போலீசுக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை – மகன் மரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் நீதிபதிகள் சிபிசிஐடி போலீசாருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்கள். நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சிபிசிஐடி செயல்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. முன்னதாக சிபிசிஐடி காவலர்கள் இதனை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். நேற்றைய தினம் தன்னுடைய விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள் சாத்தான்குளம் காவல் நிலையம், பென்னிக்ஸ் கடை, வீடு உள்ளிட்ட இடங்களிலும் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கனேஷ், பாலகிருஷ்ணன், 2 காவலர்கள் என 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதில் சிபிசிஐடி நீதியை நிலைநாட்டுகின்றது என்று நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். அதே போல பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை சிபிசிஐடி நடவடிக்கை ஏற்படுத்துவதாக நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.