விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய நீயா நானா நிகழ்ச்சியை கோபிநாத் சென்ற 15 வருடங்களுக்கும் மேல் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் முதன் முறையாக மக்கள் யார் பக்கம் எனும் நிகழ்ச்சியை தான் தொகுத்து வழங்கினார். இதையடுத்து சிகரம் தொட்ட மனிதர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த கோபிநாத், பின் அதிரடியாக கையிலெடுத்த நிகழ்ச்சி தான் நீயா நாயா.
அன்று முதல் இன்றுவரை இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக எடுத்து மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறார். இந்த நிலையில் தொகுப்பாளர் கோபிநாத்தின் தாய், தந்தையின் புகைப்படம் வெளியாகி இருக்கிறது. இதில் கோபிநாத்தின் தந்தை சென்ற 2020ஆம் ஆண்டு மறைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.