நம்பியூர் அருகே பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகில் உள்ள கோட்டுபுள்ளாம்பாளையம் பகுதியில் வசித்து வந்த சீனிவாசன் என்பவருடைய இளையமகள் மலர்(19). இவர் கோபியில் உள்ள அரசு பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மலரிடம் சீனிவாசன் நானும் அம்மாவும் பர்கூரில் உள்ள எனது சித்தப்பா வீட்டு கல்யாணத்திற்கு செல்கிறோம். நீயும் பள்ளிக்கூடம் போகாமல் எங்களுடன் வா என்று அழைத்துள்ளனர்.
இதனால் மலர் கோபித்துக் கொண்டாள். பின் சீனிவாசனும் அவர் மனைவியும் பர்கூர்க்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த மலர் சேலையால் மரச் சட்டத்தில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் மலரை மீட்டு கோட்டுபுள்ளாம் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார்கள். பின் மேல் சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மலர் பரிதாபமாக உயிரழந்தார். இது தொடர்பாக நம்பியூர் காவல்துறை இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.