Categories
சினிமா தமிழ் சினிமா

“நீயும் பொம்மை நானும் பொம்மை”…? வெடிக்கும் பல பிரச்சனைகள்… என்ன நடக்கிறது பிக் பாஸ் வீட்டில்…?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் தமிழ் ஆறாவது சீசன் கடந்த அக்டோபர் ஒன்பதாம் தேதி கோலாகலமாக தொடங்கியுள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடந்த வாரம் எபிசோட்டில் முதல் நபராக சாந்தி எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஜிபி முத்து தானாக முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளார். இந்த நிலையில் இதில் தற்போது 19 நபர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர் இதனை அடுத்து பிக் பாஸில் நீயும் பொம்மை நானும் பொம்மை எனும் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அதில் மொத்தம் 19 பொம்மைகள் இடம் பெற்றுள்ளது ஆனால் 18 பொம்மைகளை மட்டுமே போட்டியாளர்களால் எடுக்கப்பட்டு அந்த அறையில் வைக்கப்படும். மீதம் இருக்கும் ஒரு நபரின் பெயர் இடம்பெற்றிருக்கும் பொம்மை எடுக்க தவறினால் அந்த பொம்மையில் இருக்கும் நபர் ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார் என கூறப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த டாஸ்கினால் பிக் பாஸ் வீட்டில் பெரும் பிரச்சனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில் அசீம், ஷிவின் இருவரும் வெளியில் இருக்கும் சிறைச்சாலைக்கு செல்கின்றார்கள். அப்போது அசீம் சிறைச்சாலை ஒரு பூஞ்சோலை அடுத்த முறையில் இருந்து நோ வொர்க் தான் என கூறுகின்றார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.  இதற்கு முன்பாக பொம்மை டாஸ்கினால் அசீமிற்கும், தனலட்சுமி இருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |