Categories
தேசிய செய்திகள்

“நீரஜ்” பெயர் கொண்டவர்களுக்கு…. பெட்ரோல் இலவசம் இலவசம்…. அசத்தல் அறிவிப்பு…!!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். இதனையடுத்து இவருக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவருடைய வெற்றியை பலரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் குஜராத்தின் பாருச் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் “நீரஜ்” என்ற பெயர் கொண்ட அனைவருக்கும் ரூ.501 மதிப்புள்ள பெட்ரோல் இலவசமாக கொடுத்துள்ளனர்.

அது மட்டுமல்லாமல் அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து தங்களுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நேற்றும் இன்றும் கொடுத்த என்ற ஆப்பரில் பலரும் இலவச பெட்ரோல் பெற்றுக் கொண்டனர்.

Categories

Tech |