பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
இன்றைய தலைமுறையினர் காய்கறிகளை சரியாக சாப்பிடாமல் ஜங்க் ஃபுட் உணவுகளை அதிகம் உட்கொண்டு வருவதால் அவர்களின் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி நோய்வாய்ப் படுகின்றனர். வீட்டிலுள்ளவர்கள் எவ்வளவு தான் காய்கறிகளை வாங்கி சமைத்துக் கொடுத்தாலும் அதை சாப்பிடுவதில்லை. பீன்ஸ் பொரியல் என்றால் பலரும் சாப்பிட மாட்டார்கள்.
இதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்.
பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் அதில் உள்ள ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கும்.
பீன்ஸ் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்படுவதுடன் ரத்த அழுத்தத்திற்கு அதிகமாக சர்க்கரை சேர்வதை தடுக்கும்.
இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள், புரோட்டீன், காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் மற்றும் கால்சியம், இரும்பு ,மாங்கனீசு, பாஸ்பரஸ் மற்றும் மக்னீஷியம் உடல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், இதயத்திற்கும் சிறந்ததாக உள்ளது.
இதில் உள்ள கனிம சத்து எலும்புகளை வலுவாக்கிறது. மற்ற காய்கறிகளை விட இந்த காய்கறியில் சிலிகான் எளிதில் உறிஞ்ச பெறுவதோடு, செரிமானமும் அடையும்.
சிலருக்கு கோதுமை, பார்லி போன்ற தானியங்களில் உள்ள க்ளுட்டன் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் தானியங்களுக்கு பதிலாக பீன்ஸ் சாப்பிடலாம். தானியங்களில் கிடைக்கக்கூடிய சத்துக்களும் கிடைக்கும்.
பச்சை பீன்ஸில் உள்ள கரோட்டினாய்டுகள் சருமத்தின் அழகை அதிகரித்து, முதுமையை எதிர்த்து போராடும்.