புனித நீராடி கொண்டிருந்த பக்தர்களின் உடைமைகளை திருடிய குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்த சுற்றுலாப்பயணிகள் அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்தை பார்த்து ரசிக்கின்றனர். அதன் பிறகு சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஐயப்ப பக்தர்கள் தங்களது உடைமைகளை கடற்கரையில் வைத்துவிட்டு புனித நீராடியுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர் கரையில் வைத்திருந்த பொருட்களை திருடி சென்றுள்ளார்.
இதுகுறித்து ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் திருவெறும்பூர் பகுதியில் வசிக்கும் தொழிலாளியான மூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. மேலும் மூர்த்தி ஐயப்ப பக்தர்களின் உடைமைகளை திருடியுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மூர்த்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.