Categories
உலக செய்திகள்

நீரில் மூழ்கிய விசை படகு …. 7 பேர் உயிரிழப்பு …. கனடாவில் பரபரப்பு …!!

ஸ்பானிஷ்  மீனவர்கள் சென்ற விசைப்படகுகள் மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு கனடாவில்நியூ பவுண்ட்லேண்ட்   என்ற இடத்தில் பாரிஸ் மீனவர்கள்கடலில் மீன் பிடித்து கொண்டிருக்கும் பொது திடீரென விபத்து ஏற்பட்டுள்ளது.  இதனால்  நேற்று அதிகாலை5.24 மணிக்கு  கலீசியா துறைமுகத்தை சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடி கப்பலில் இருந்து மாட்ரிடிற்கு பேரிடர் அழைப்பு வந்துள்ளது. 5 மணி நேரம் கழித்து அந்த கடல் பகுதிக்கு அருகில் இருந்த மற்றொரு ஸ்பானிஷ் விசை படகு இரண்டு படகுகளையும்  கண்டுபிடித்தது.

இந்த படகில்   24 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் 3 பேர் உயிருடனும் மற்றும் 7 பேர்  இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.மேலும் மீதமுள்ள 14 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனையடுத்து  உயிர்பிழைத்த 3 மீனவர்களும் கடுமையான குளிர்ந்த வெப்பநிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்களை கனேடிய மீட்புக்குழு  ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பாகக் கொண்டு சென்று  சிகிச்சையளித்து  வருகின்றனர். மேலும் கனடிய மீட்புக்குழுவினர் ஹெலிகாப்டர் ராணுவ விமானம், கடலோர காவல் படை கப்பல் மூலம் தேடுதல் பணி தொடர்வதாகவும், கடுமையான வானிலை தேடுதல் பணிக்கு சவாலாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |