Categories
தேசிய செய்திகள்

நீரில் மூழ்கி இறந்த சிறுவனை…. உயிர்பிழைக்க வைக்க ஊர்மக்கள் செய்த காரியம்…. வினோத சம்பவம்….!!!!!

கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்திலுள்ள சிர்வாரா கிராமத்தில் சுரேஷ் என்ற 10 வயது சிறுவன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று நீரில் மூழ்கி உயிரிழந்தான். இதனையடுத்து இறந்த சிறுவனின் உடலை பெற்றோரும், கிராம மக்களும் சேர்ந்து மீட்டனர். அதன்பின் அந்த சிறுவனை மீண்டுமாக உயிர்த்தெழ செய்வதற்கு வினோத நடைமுறையை மேற்கொண்டனர். அதாவது 80 கிலோ உப்பைக்கொட்டி, சிறுவனின் தலையைத் தவிர மற்ற உடல் பாகங்கள் அனைத்தையும் புதைத்தனர்.

பின் சிறுவன் உயிர்த்தெழுந்து விடுவான் என்ற நம்பிக்கையில் சுமார் 4 மணிநேரம் காத்திருந்தனர். எனினும் சிறுவன் உயிர்த்தெழவில்லை. அதனை தொடர்ந்து சிறுவன் சடலத்தை முறைப்படி மயானத்தில் அடக்கம் செய்தனர். மக்களின் இச்செயலை கண்ட மற்றவர்கள் வியப்பில் ஆழ்ந்தனர். இறந்த சிறுவனை உயிர்த்தெழ கிராம மக்கள் செய்த இந்த விநோத நடைமுறை குறித்த செய்தி இப்போது இணையங்களில் வைரலாக பரவிவருகிறது.

Categories

Tech |