Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நீரில் மூழ்கி உயிரிழந்த பிரபல நடிகர்… இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்…!!!

நீரில் மூழ்கிய பிரபல மலையாள நடிகர் இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது .

மலையாள திரையுலகில் பிரபல நடிகர் அனில் நெடுமங்காட்  ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ‘அய்யப்பனும் கோஷியும்’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் இவர் பாவாட, கம்மாட்டிபாடம் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார் . இவர் கடைசியாக நடித்த படம் ‘பாபம் செய்யாதவர் கல்லெறியட்டே ‘. இதையடுத்து இவர் ஜோஜு ஜார்ஜ் கதாநாயகனாக நடிக்கும் பீஸ் என்ற படத்தில் நடித்து வந்தார்.   தொடுபுழாவில் நடந்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் அனில் நெடுமங்காட் அங்கு சென்றிருந்தார். நேற்று மாலை இவர் படப்பிடிப்பு முடிந்த பின் அங்குள்ள மலங்காரா  அணையில் நண்பர்களுடன் குளிக்க சென்றுள்ளார் .

மலங்காரா அணை

அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். படப்பிடிப்பிற்காக சென்ற பிரபல நடிகர் அணையில் மூழ்கி உயிரிழந்தது மலையாள திரையுலகில்  மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது அனில் நெடுமங்காட் இறப்பதற்கு முன் குளித்துக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |