Categories
தேசிய செய்திகள்

நீரிழிவுக்கு மலிவு விலை மாத்திரை…. மக்களுக்கு மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்….!!!!

மத்திய அரசின் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 8,700 க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஜெனரிக் மருத்துவர்கள், மாத்திரைகள் அதே மருந்து கொண்ட கம்பெனி மாத்திரைகளின் விலையை விட மலிவான விலையில் விற்கப்படுகின்றன. இந்நிலையில் டைப் 2 நீரிழிவுக்கு சிடாக்லிப்டின் என்ற மாத்திரையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இந்த மாத்திரைகள் மக்கள் மருந்தகங்களில் கிடைக்கும் என்றும் 50 மில்லி கிராம் கொண்ட 10 சிடாக் லிப்டின் பாஸ்பேட் மாத்திரைகள் அடங்கிய அட்டை 60 ரூபாய்க்கு விற்கப்படும். 100 மில்லி கிராம் கொண்ட அந்த மாத்திரை அட்டையின் விலை 100 ரூபாய் மட்டுமே. சிடாக் லிப்டின் மற்றும் மெட்பார்மின் ஹைட்ரோ குளோரைடு இணைந்த கலவை மாத்திரைகள் 65 ரூபாய் மற்றும் 70 ரூபாய்க்கு கிடைக்கும் என்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே மருந்து கொண்ட கம்பெனி மாத்திரைகள் 162 ரூபாய் முதல் 258 ரூபாய் வரை விற்கப்படுவதாகவும் கூறியுள்ளது.

Categories

Tech |