நீரழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கக்கூடிய சிவரிக்கீரை குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
நீரழிவு நோயாளிகளுக்கு சிவரிக்கீரை நன்மை அளிக்கிறது . நீங்கள் உணவில் சிவரிக்கீரை சேர்த்து உண்ணலாம். பச்சையாக சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நேரடியாக விழுங்கலாம்.
உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த சிவரிக்கீரை மிகவும் உதவியாக இருக்கும். வகை 2 நீரழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் மருத்துவ குணங்கள் சிவரிக்கீரையில் உள்ளன. நீங்கள் ஒரு நீரிழிவு நோயாளியாக இருந்தால் மருந்துகளை சாப்பிடும்போது ஒரு சில வீட்டு வைத்தியங்கள் எடுத்து சர்க்கரையை கட்டுப்படுத்தலாம் .
இதற்காக சாப்பிட்ட பிறகு 45 நிமிடங்கள் கழித்து சிவரிக்கீரை தேநீர் குடிப்பது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். சிவரிக்கீரை தேநீர் தயாரிக்க ஒரு கோப்பை சிவரிக்கீரை ஒரு தேக்கரண்டி பெருஞ்சீரகம் மற்றும் கால் டீஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் ஆகியவற்றை சூடான நீரில் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது நேரம் கழித்து அதை வடிகட்டி குடிக்கவும். இதை தவறாமல் உட்கொள்வதால் சர்க்கரையின் அளவு குறையும்.