நீரிழிவு நோய்க்கு வாய்வழியாக உட்கொள்ளும் இன்சுலின் மருந்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு நீரிழிவு நோய் உள்ளது. அவர்கள் அனைவருக்கும் இன்சுலின் மருந்து ஊசியாக போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அபுதாபி நியூயார்க் பல்கலைக் கழகத்தின் சார்பில் ஆராய்ச்சியாளர்கள் நீரிழிவு நோய்க்கு வாய்வழியாக உட்கொள்ள இன்சுலின் மருந்தை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது. இனி இன்சுலின் ஊசி னால் ஏற்படும் ஒவ்வாமை இலிருந்து நீரிழிவு நோயாளிகளுக்கு விடுதலை கிடைக்கும் என கூறியுள்ளனர்.